உள்ளூர் செய்திகள்

போட்டோகிராபி இலவச பயிற்சி

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதுாரில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் மத்திய அரசு சான்றிதழுடன் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.இதில், போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பயிற்சிகள் இலவசமாக, 31 நாட்கள் வழங்கப்படுகின்றன. இங்கு, புகைப்பட கலை மற்றும் வீடியோ கிராபி பயிற்சியில் டி.எஸ்.எல்.ஆர்., வீடியோ எடிட்டிங், போட்டோஷாப், சினிமாடிக் ஷூட்டிங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.பயிற்சியில் சேர வயது, 18லிருந்து, 50க்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலை, 9.30 மணியிலிருந்து மாலை, 5.30 மணி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் ஆதார் இருக்க வேண்டும். கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தபட்சம், 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சியின் போது தேநீர், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு, 94890 43926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்