உள்ளூர் செய்திகள்

கல்லூரியில் கலாச்சார சமையல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையிலான சமையல் பயணம் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது.முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கத்தார் நாட்டில் உள்ள நெய்பர்வுட் ரெஸ்டாரண்ட் நிறுவனத்தின் நிர்வாக சமையல் நிபுணர் ஷெப் அருள் பீட்டர் அரபிக் காஸ்ட்ரோமனி என்ற தலைப்பில் பேசினார். அரபு நாடுகளில் பாரம்பரிய உணவு வகையான பிளாக்கென் சிக்கன், வாம் பிரான்ஸ் மற்றும் வத்தூஸ் உணவுகள், அவற்றின் செயல்முறைகள் நவீன விருந்தோம்பல் துறையின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.அரபு சமையல் கலை குறித்த தொழில் நுட்பங்களை விளக்கினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ,பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்