உள்ளூர் செய்திகள்

சித்ரதுர்காவில் சின்க்ரோட்ரான் மையம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள "சித்ரதுர்கா' மாவட்டத்தில் "சின்க்ரோட்ரான்' மையம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. மின்னணுக்களின் வேகத்தை துரிதப்படுத்தும் சாதனத்தின் பெயர் "சின்க்ரோட்ரான்'. இது அதிக திறனுடைய ஒளிக்கற்றை உருவாக்கும் திறன்படைத்தது. இந்த சாதனத்தின் மூலமாக சூரியனின் ஒளியை விட பிரகாசமான ஒளியை உருவாக்க முடியும். புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சைகளுக்கு சின்க்ரோட்ரான் மையம் உதவும். இந்த மையமானது, பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பெரிதும் உதவும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மையங்கள் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ளது. இதுவரை இந்தியா இதுபோன்ற தொழில்நுட்பங்களுக்கு வெளிநாடுகளையே சார்ந்திருந்தது. இந்த மையத்தை அமைப்பதில் பெங்களூருவில் உள்ள "இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்' கல்வி நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மையம் அமையவுள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் பாபா அணுதி ஆராய்ச்சி மையம்(பார்க்.,) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டி.ஆர்.டி.ஓ.,) ஆகிய இரு அமைப்புகளின் கிளைகளும் அமைய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்