உள்ளூர் செய்திகள்

உற்சாகத்தில் ரெக்ரூட்மென்ட் நிறுவனங்கள்

தற்போதெல்லாம் கல்லூரிப் படிப்பின் இறுதியாண்டிலேயே எதிர்கால பணியைப் பற்றி யோசிக்கவும், அதனைத் தேர்ந்தெடுப்பதனையும் இன்றைய மாணவர்கள் விரும்புகிறார்கள். இதற்காகவே "கேம்பஸ் இன்டர்வியூ&' எனப்படும் முறையும் செயல்பட்டு வருகிறது. சர்வ தேச பொருளாதார நெருக்கடியின் மீட்சிக்குப் பிறகு இந்தியா அபரிமிதமான பொருளாதார முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக கல்லூரிகளில் கேம்பஸ் முறையில் பணிக்கான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் "பிளேஸ்மென்ட் செல்&' எனப்படும் பணியிலிருத்தும் அமைப்புகள் உற்சாகமான முன்னேற்றப் பாதையில் உள்ளன. குருஷேத்திராவிலுள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, வேலூரின் வி.ஐ.டி., ஆகிய கல்வி நிறுவனங்களிலுள்ள பணியிலிருத்தும் அமைப்புகள் தற்போது மிக நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றன. என்.ஐ.டி.,க்கு 115 நிறுவனங்கள் கேம்பஸ் முறைக்கு வரத் தயாராக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. வேலூரின் வி.ஐ.டி.,யின் 1600 மாணவர்களுக்கு இந்த ஆண்டு கேம்பஸ் முறையில் பணி வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன. மேன்பவர் எம்ப்ளாயின்மென்ட் அவுட் லுக் சர்வேயின் கணிப்பின் படி இந்தியாவின் நிகர பணிவாய்ப்பு விகிதம் கடந்த ஆண்டைவிட ஐந்து சதவிகிதம் அதிகரித்து தற்போது 42 சதவிகிதமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வ தேச அளவில் இந்த விகிதம் இந்தியாவிலேயே அபரிமிதமாக வளர்ந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மா போய் நிறுவனத்தின் ஆய்வின் படி இந்த ஆண்டு இந்தியாவின் அமைப்பு சார்ந்த துறைகளில் 11 லட்சத்திற்கும் அதிகமான பணி வாய்ப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஹாஸ் பிடாலிடி, ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., ஆகிய துறைகளும் அபரிமித வளர்ச்சி அடைந்து வருவதாக மாபோய் நிறுவனம் கணித்துள்ளது. பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியின் காரணமாக டெலிகாம் மற்றும் பார்மா துறைகளில் ஊதிய அதிகரிப்புகள் ஏற்பட சாதகமான நிலை உள்ளதாகவும், பல்வேறு துறைகளிலும் நிலவும் சாதகமான சூழலின் காரணமாக இந்த ஆண்டு ஊதியங்கள் அதிகரிக்கும் நிலை பல்வேறு துறைகளிலும் நிலவுவதாக மெர்சர் என்ற எச்.ஆர்., கன்சல்டேஷன் நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்