உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் படிப்பதற்கான நுழைவுத்தேர்வுகள்

(அமெரிக்க கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகள் குறித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான கட்டுரையின் தொடர்ச்சி.....) சாட் 2: பாடத் தேர்வுகள் இந்த தேர்வுகள் மணிக்கணக்கில் நேரம் எடுக்கும், உள்ளடக்க அடிப்படையிலான பலவித விருப்பத்தேர்வு அடிப்படையில் அமைந்தவை, குறிப்பிட்ட பாடங்களில் மாணவரின் அறிவு மற்றும் அந்த அறிவைப் பயன்படுத்தும் திறன் போன்றவற்றை சோதிக்கின்றன. இந்த தேர்வுகளில் நீங்கள் உங்கள் விருப்பமான பாடங்களையும்/தேர்வுகளையும் தேர்ந்தெடுத்து, அதன்மூலம் உங்கள் சோதனைகளையும், விருப்பங்களையும் காண்பிக்கலாம். சில கல்லூரிகள் பாடத் தேர்வு மதிப்பெண்கள் மூலம், மாணவர்களை குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்குத் தேர்ந்தெடுக்கின்றன. வரலாறு, ஆங்கிலம், மொழிகள், கணிதம், அறிவியல் ஆகிய 5 பொதுப் பாடப்பகுதிகளில், 20 சாட் பாடத்தேர்வுகள் உள்ளன. ஒவ்வொரு தேர்வும் 200-800 என்ற அளவில் மதிப்பிடப்படுகின்றன. பிசாட்(பிரிலிமினரி சாட்) கல்லூரி வாரியம் மற்றும் தேசிய மெரிட் ஸ்காலர்ஷிப் கார்பரேஷன்(என்.எம்.எஸ்.சி) ஆகியவை இணைந்து இந்த பிரிலிமினரி சாட் தேர்வை(பி.எஸ்.ஏ.டி/என்.எம்.எஸ்.க்யூ.டி) நடத்துகின்றன. இந்த தேர்வானது, சாட் தேர்வுக்கான சிறந்தப் பயிற்சியைத் தருகிறது. இந்த தேர்வானது நிரந்தரக் குடியுரிமை, என்.எம்.எஸ்.சி. ஸ்காலர்ஷிப் திட்டத்தைப் பெறும் வாய்ப்பு மற்றும் கல்லூரியில் நுழைதல் மற்றும் தொழில் திட்டமிடுதல் அம்சங்களுக்கும் உதவுகிறது. பி.எஸ்.ஏ.டி/என்.எம்.எஸ்.க்யூ.டி., மாணவர்களின் ஆய்வுப் படிப்புத் திறன், கணித சிக்கல்களைத் தீர்க்கும் திறன் மற்றும் எழுத்துத் திறன்களை சோதிக்கிறது. இதில் 5 பிரிவுகள் உள்ளன. இரண்டு 25 நிமிட ஆய்வுப் படிப்பு பகுதிகள், இரண்டு 25 நிமிட கணிதப் பகுதிகள், ஒரு 30 நிமிட எழுத்துத்திறன் பகுதி ஆகியவை உள்ளன. முழுத் தேர்வுக்கும் 2 மணிநேரம் 10 நிமிடங்கள் ஆகும். இந்தத் தேர்வு தற்போது இந்தியாவிலும் நடத்தப்படுகிறது மற்றும் 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஏ.பி. தேர்வுகள் 'அட்வான்ஸ் பிளேஸ்மென்ட்' எனப்படும் இந்த தேர்வுகள், அமெரிக்கா மற்றும் 40 வேறு நாடுகளிலும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பொருட்டு மாணவர்களால் எழுதப்படுகிறது. குறைந்த திட்டமிடுதல் மற்றும் முயற்சிகளின் மூலம், அதிகமான பணத்தையும், நேரத்தையும் அமெரிக்காவில் சேமிக்க முடியும். தற்போது 11,12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத முடியும். இந்த தேர்வை எழுதும் இந்திய மாணவர்கள், வேதியியல், உயிரியல், இயற்பியல், உளவியல், உலக வரலாறு, மனித புவியியல், ஆங்கில மொழி, அமெரிக்க வரலாறு, கணிப்பொறி அறிவியல், புள்ளியியல், சூழ்நிலை அறிவியல் போன்ற பாடங்களில் இந்த தேர்வை எழுத முடியும். ஒவ்வொரு வருடமும் மே மாதம், கல்லூரி வாரியத்தால் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்குப் பதிவுசெய்யும் கடைசித்தேதி மார்ச் 1. இந்தியாவில் இந்தத் தேர்வானது டெல்லி, மும்பை, சென்னை மற்றும் அகமதாபாத் போன்ற இடங்களில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஏ.பி. தேர்வுக்கும் 86 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எம். சி. ஏ. டி. (மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் டெஸ்ட்)  தேர்வெழுதுபவரின் பிரச்சினை தீர்க்கும் திறன், சிக்கல் தீர்க்கும் மற்றும் எழுதுதல் திறமை, மருத்துவ படிப்பிற்கு தேவையான அறிவியல் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை சோதிக்கும்பொருட்டு, நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வாகும் இது. மருத்துவக் கல்லூரிகள் எம்.சி.ஏ.டி. மதிப்பெண்களை தங்கள் மாணவர் சேர்க்கையின் ஒரு பகுதியாக கருதுகின்றன. மேலும் பெரும்பாலான அமெரிக்க மருத்துவ கல்லூரிகள் இந்த மதிப்பெண்ணை முக்கியமானதாக கருதுகின்றன. பொதுவாக கல்லூரியில் ஜூனியர்களாக இருக்கும் மாணவர்களால், அவர்களின் மூன்றாம் வருட படிப்பின்போது இத்தேர்வு எழுதப்படுகிறது. எழுதி 3 வருடம் ஆன எம்.சி.ஏ.டி. தேர்வு மதிப்பெண்களை பல மருத்துவ கல்லூரிகள் ஏற்றுக்கொள்வதில்லை. எல்.எஸ்.ஏ.டி. (லா ஸ்கூல் அட்மிஷன் டெஸ்ட்) சட்டக் கல்லூரிகளுக்கான சேர்க்கை தேர்வான இது, வருடத்திற்கு 4 முறை, உலகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நடத்தப்படுவதாகும். அமெரிக்க பார் அசோசியேஷன் அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லூரிகள், பெரும்பாலான கனடியன் சட்டக் கல்லூரிகள் மற்றும் பெரும்பாலான சட்டக் கல்லூரிகள் இந்த தேர்வை நடத்த விண்ணப்பங்களை வரவேற்கின்றன. விண்ணப்பதாரரின் படித்தல் மற்றும் வெர்பல் பகுப்பாய்வு திறன்களை இந்த தேர்வின் மூலம் சட்டப் பள்ளிகள் அறிந்து கொள்கின்றன. இந்த தேர்வை டிசம்பர் மாதத்திற்கு பதிலாக, ஜூன் அல்லது செப்டம்பர் மாதத்தில் எழுதுவதே சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இந்த தேர்வில், 35 நிமிடங்கள் எழுதக்கூடிய, பலவித விருப்பக் கேள்விகளைக் கொண்ட 5 பகுதிகள் உள்ளன. ஐந்தில் 4 பகுதிகள், எழுதுபவர் பெறும் மதிப்பெண்களில் முக்கிய பங்கை வகிக்கின்றன. மதிப்பெண் இல்லாத பிரிவானது, பலதரப்பட்ட பிரிவாக குறிப்பிடப்படுகிறது. ஒரு 35 நிமிட எழுதுதல் மாதிரியானது, தேர்வின் முடிவில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த எழுதுதல் மாதிரிக்கு மதிப்பெண் கிடையாது. ஆனால் இதன் நகல்கள், நீங்கள் விண்ணப்பிக்கும் அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். சரியான முயற்சிகளின் மூலம் இந்த தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்