உதவிக்கரம் நீட்டும் ஐ.ஐ.டி.,க்கள்
நாட்டில் உள்ள 15 ஐ.ஐ.டி., க்கள், இதர தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு உதவும் வகையில் புதிய சட்டத்திருத்தம் (இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அமென்டுமென்ட்ஸ் பில் 2010) செய்யப்படுகிறது. இதன்படி அனைத்து ஐ.ஐ.டி., கல்வி மையங்களும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மற்ற கல்வி நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். ஐ.ஐ.டி., க்களில் உள்ள தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களை மற்ற கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஐ.ஐ.டி., சார்பில் தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும் ஐ.ஐ.டி., க்களை பார்வையிட மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு செயல்படும் போது ஐ.ஐ.டி., க்களில் படிக்கும் மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.