உள்ளூர் செய்திகள்

பாண்டிச்சேரியில் புதிய ஐ.ஐ.எம்.

பாண்டி: பாண்டிச்சேரியில் ஐ.ஐ.எம். அமைப்பதற்கு மனிதவள அமைச்சர் கபில்சிபல் ஒப்புதல் அளித்துள்ளார். அடுத்து செயல்படுத்தப்பட உள்ள 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் இதை அமைக்க கபில் சிபல் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய நாராயணசாமி, "காரைக்காலில் என்.ஐ.டி. அமைய உள்ள நிலையில், புதுச்சேரியில் ஒரு ஐ.ஐ.எம். அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியை, தென்னிந்தியாவின் ஒரு கல்வி மையமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதிதான் இது" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்