உள்ளூர் செய்திகள்

வரும் ஜூலை 1 ம் தேதி பொறியியல் கவுன்சிலிங்?

மாணவர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2011 தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான கூட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பொறியியல் சேர்க்கை குறித்த பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. அதன்படி, மே 16ஆம் தேதி - தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியான மூன்றாம் நாள் - பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் துவங்க உள்ளது. இந்த ஆண்டும் மே இரண்டாம் வார இறுதியில்   பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதன் அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு விண்ணப்பப் படிவங்கள் பற்றாக்குறை ஏற்படாத வகையில் குறைந்தது 2 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிற்கு 491 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1,95,324 பி.இ./பி.டெக் படிப்பிற்கான சேர்க்கை இடங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.  மேலும், எம்.இ./எம்.டெக்., மற்றும் எம்.பி.ஏ./எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை குறித்து தமிழ்நாடு பொது சேர்க்கை (டிஏஎன்சிஏ 2011) கூட்டமும் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு சேர்க்கையின் போது கடைபிடிக்கப்பட்ட அதே நடைமுறையை இந்த ஆண்டும் பின்பற்றுவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்