உள்ளூர் செய்திகள்

குரூப் 1 தேர்வு தள்ளிவைப்பு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக, டி.என்.பி.எஸ்.சி., &'குரூப் - 1&' தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குரூப் - 1 பணியிடங்களை நிரப்புவதற்கான பிரதான தேர்வு, மே, 28, 29 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், இன்ஜினியரிங் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, ஜூன் 6ல் நடப்பதாக இருந்தது. இந்த இரண்டு தேர்வுகளும், கொரோனா பரவல் காரணமாக, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக, அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்