உள்ளூர் செய்திகள்

ஜெயித்துக்காட்டுவோம்: நேற்று 10ம் வகுப்புக்கு..., இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு....

பொள்ளாச்சி: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், தேர்வை பயமின்றி எதிர்கொள்வதற்கும் தினமலர் நாளிதழ் சார்பில், பொள்ளாச்சியில் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி துவங்கியது. பொள்ளாச்சியில், தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நேற்று(நவம்பர் 1) துவங்கியது. தினமலர் டி.வி.ஆர்., அகாடமி, கல்விமலர், மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மற்றும் நேரு குரூப் ஆப் இன்ஸ்டிட்யூட்ஸ் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்குகிறது. பொள்ளாச்சி -உடுமலை ரோட்டில் மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள நுாற்றாண்டு விழா அரங்கில் நேற்று பத்தாம் வகுப்பு தமிழ் கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. இதில், திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து, இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9.00 மணி முதல் பிளஸ் 2 சயின்ஸ் குரூப் மாணவர்களுக்கும், மதியம் 1.00 மணி முதல் ஆர்ட்ஸ் குரூப் மாணவர்களுக்கும் நடைபெறும். பிளஸ் 2 மாணவர்களுக்கு பி.எஸ்.ஜி.,சர்வஜனா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் டிப்ஸ் வழங்குகின்றனர். தமிழ் - ரஞ்சிதம், ஆங்கிலம் -சாந்தா, கணிதம்- தட்சிணாமூர்த்தி, இயற்பியல் - சங்கர் கணேஷ், வேதியியல் - சிவக்குமார், தாவரவியல் - ஸ்ரீ சுதா, கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் - விஜயலட்சுமி, பொருளியல் - வித்யா, கணினி அறிவியல் - அனிதா ஆகியோரும் டிப்ஸ் வழங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்