உள்ளூர் செய்திகள்

கொடிசியாவில் துவங்கியது 10 நாள் புத்தக திருவிழா

கோவை: கொடிசியா நடத்தும் 10 நாள் புத்தக திருவிழா, கொடிசியாவில் நேற்று துவங்கியது.ஆன்மிக தேடலில் இருப்போருக்கும், ஆர்வத்தை தீர்த்துக் கொள்ளும் கதைகளை படிப்போருக்கும், சமையல் குறிப்புகளையும், மருத்துவத்தையும் தேடுவோருக்கும் பயனளிக்கும் புத்தகங்கள் நிறைய உள்ளன.பத்து நாட்கள் நடக்கும் கண்காட்சியில் ஒவ்வொரு நாள் மாலையும் பொழுது போக்கு நிகழ்வுகள் உள்ளன. காலை 10:00 மணிக்கு துவங்கும் கண்காட்சி, இரவு 8:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.புத்தக திருவிழாவில் இன்று! காலை 11:00 மணிக்கு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான வினாடி வினா, புத்தக புதையல் வேட்டை, இளம் எழுத்தாளர் பயிற்சி போன்றவை நடக்கின்றன. மதியம் 3:30 மணிக்கு மகளிர் சொல்லாடல் மன்றமும், மாலை 6:00 மணிக்கு நானீஸ் ரிதம் ஆர்க்கெஸ்ட்ரா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.வரவேற்கிறது 'தினமலர்' அரங்கு!புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ள தினமலர் அரங்கில், தாமரை பிரதர்ஸ் வெளியீட்டில் தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரைகள் புத்தக வடிவில் வெளி வந்துள்ளன. வரலொட்டி ரங்கசாமி எழுதிய 'பச்சை புடவைக்காரி', 'தீக்குள் விரலை வைத்தால்', 'கண்ணன் என்னும் காதல் தெய்வம்' போன்றவை இடம் பெற்றுள்ளன. மகா பெரியவா, பையன் பதில்கள், பார்வையை மாற்றுங்கள்; பாராட்டு நிச்சயம் போன்ற பல ஜனரஞ்சகமான புத்தகங்கள் உள்ளன. 'ஏ' அரங்கில், தினமலர் 17வது ஸ்டாலில் இடம் பிடித்துள்ளது. தினமலர் நாளிதழுக்கு இங்கு சந்தா செலுத்தும் வசதியும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்