உள்ளூர் செய்திகள்

சிறந்த கல்லூரிகளில் 10 புதிய படிப்புகள்

சென்னை பல்கலையின் கீழ் இயங்கும் சிறந்த கல்லூரிகளைத் தேர்வு செய்து அவற்றில் புதிய பாத்து படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்று சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், வரும் கல்வியாண்டில் எம்.எஸ்சி., - யோகா, எம்.ஏ., - நிதி பொருளாதாரம், எம்.ஏ., - பொது நிர்வாகம் உள்ளிட்ட 10 முதுகலை படிப்புகளும், இரண்டு எம்.பில்., படிப்புகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும், பி.காம்., - ஹானர்ஸ், பி.ஏ., - ஹானர்ஸ், பி.எஸ்சி., - ஹானர்ஸ் (நான்கு ஆண்டு) படிப்புகளும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதை, பரீட்சார்த்த அடிப்படையில், 10 சிறந்த கல்லூரிகளில் அமல்படுத்த இருப்பதாகவும், இதற்கு, கல்லூரி நிர்வாகங்கள், இம்மாத இறுதிக்குள் சென்னை பல்கலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் துணைவேந்தர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்