உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ. வழங்கும் 13 தொழிற்பிரிவு படிப்புகளை அங்கீகரித்தது யு.ஜி.சி

நாக்பூர்: பள்ளி மேல்நிலைப் படிப்பில், சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தியுள்ள 13 தொழிற்பிரிவு படிப்புகளுக்கு, யு.ஜி.சி., அங்கீகாரமளித்துள்ளது. இதன்மூலம், மேல்நிலைப் படிப்பில், தொழிற்பிரிவை தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு நல்வாய்ப்பு அமைந்துள்ளது. இது அம்மாணவர்களுக்கு ஒரு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதன் மூலம், நாட்டின் பல பல்கலைக்கழகங்கள், இந்தப் பிரிவு படிப்புகளை, இளநிலை பட்டப் படிப்புகள் நிலையில் அறிமுகப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதுதொடர்பாக UGC தரப்பில் கூறப்படுவதாவது: பல்வேறான உயர்கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் தொழிற்பிரிவு இளநிலைப் படிப்புகளுடன், இந்தப் புதிய படிப்புகள், தம் பிரதிபலிப்பை உணரும். எனவே, இந்தப் புதிய படிப்புகளை, பள்ளி மேல்நிலைப் படிப்பில் படித்து முடித்துவரும் மாணவர்களை, கல்லூரி இளநிலைப் படிப்பில் சேர்க்கையில், தேவையான பரிசீலனையைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அனைத்து UGC இணைப்பு பல்கலைகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்