போட்டித்தேர்வு பயிற்றுனர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்
சேலம்: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., எஸ்.எஸ்.சி., டி.ஆர்.பி., எம்.ஆர்.பி., உள்ளிட்ட தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்க, மதிப்பீடு குழு மூலம், தகுதி, அனுபவம் பெற்ற பயிற்றுனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பயிற்றுனர்களுக்கு அரசு விதிமுறைப்படி மதிப்பூதியம் வழங்கப்படும்.சேலம் மாவட்டத்தை சேர்ந்த விருப்பமுள்ள பயிற்றுனர், வரும், 15 மாலை, 05:00 மணிக்குள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சுய விபரத்துடன் கூடிய விண்ணப்பத்துடன், உரிய கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரில் வழங்க வேண்டும். தகவல் பெற, 0427 - 2401750 என்ற எண்ணில் அழைக்கலாம் என, சேலம் கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.