சட்டப் படிப்பில் 16 தங்கப் பதக்கங்களைக் குவித்த சாதனை மங்கை
பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா கல்வி நிறுவனத்தின் 17வது பட்டமளிப்பு விழாவில் சுற்றுச்சூழல் சட்டம், சட்டம் மற்றும் பொருளாதாரம், நிர்வாகச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், பிசினஸ் அண்ட் கார்ப்பரேட் சட்டம், புரஷனல் எத்திக்ஸ் அண்ட் பப்ளிக் லா, கிரிமினல் சட்டம், கிளினிக்கல் கோர்சஸ் அண்ட் கான்ட்ராக்ட் சட்டம் ஆகிய பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக அவருக்கு இந்தத் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. டில்லியில் உள்ள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மகளான சுசீலா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிக்க இருக்கிறார். அதற்காக அவருக்கு ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது. நேஷனல் லா ஸ்கூல் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களைவிட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடம் பெற்ற சங்கீதா அம்பாஸ்ட் 6 தங்கப்பதக்கங்களைப் பெற்றார்.