எழுத்தாளர் ஷாராஜுக்கு ரூ.2 லட்சம் பரிசு
சென்னை: எழுத்து தமிழிலக்கிய அமைப்பு சார்பில் நடந்த நாவல் போட்டியில், முதல் பரிசுக்கு தேர்வாகியுள்ள, நீர்க்கொல்லி நாவலாசிரியர் ஷாராஜுக்கு, 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:எழுத்து தமிழிலக்கிய அமைப்பு, ஆண்டுதோறும் நாவல் போட்டி நடத்தி, பரிசு பெறும் எழுத்தாளர்களுக்கு, சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசு என்ற பெயரில், 2 லட்சம் ரூபாய் வழங்கி வருகிறது. 2022ம் ஆண்டு நாவல் போட்டியின் நடுவர்களாக, எழுத்தாளர் மீரான் மைதீன், கவிஞர் கவிப்பித்தன், கவிஞர் அதிரா முல்லை ஆகியோர் பணியாற்றினர்.போட்டிக்கு வந்த அனைத்து நுால்களையும் படித்து பரிசீலித்து, அறங்காவலர் குழுவினர் ஒப்புதலுடன் எழுத்தாளர் ஷாராஜ் எழுதியுள்ள, நீர்க்கொல்லி என்ற நாவலை தேர்வு செய்துள்ளனர். பரிசு பெறும் எழுத்தாளர் ஷாராஜுக்கு என் நல்வாழ்த்துகள்.இவ்வாறு ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.