உள்ளூர் செய்திகள்

நூலகங்களிலும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

விருதுநகர்: மாவட்ட மைய நூலகங்களில் பெயர் பதிவு செய்தால் போதும், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண்ணுடன் எஸ்.எம்.எஸ் -ல் அனுப்பி வைக்கப்படும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியிடப்படவுள்ளது. இதை நூலகம் மூலம் எஸ்.எம்.எஸ் -ல் அனுப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. பாட வாரியாகவும் மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும். இதற்காக மாணவர்கள் மாவட்ட மைய நூலகத்தில் மொபைல் எண், பெயர், தேர்வு எண்ணையும் பதிவுசெய்து கொள்ள வேண்டும். இதன்படி மாணவர்கள் நூலகங்களுக்கு வந்து செல்லும் வாய்ப்பை ஏற்படுத்த, இதுபோன்ற புதிய நடைமுறையை ஏற்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்