உள்ளூர் செய்திகள்

சிறையில் பிளஸ் 2 தேர்வு

புழல் மத்திய சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு தேர்வு மையத்தில் 19 தண்டனை கைதிகள் மற்றும் 7 சிறை வார்டன்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தமிழக சிறைகளில் உள்ள ஆண், பெண் தண்டனை கைதிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்பை சிறைத் துறை உதவியுடன் பெற்று வருகின்றனர். நேற்று துவங்கிய பிளஸ் 2 தேர்வு எழுத கைதிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக, புழல் சிறையில் சிறப்பு தேர்வு மையம் ஏற்பாடு செய்யப்பட்டது. புழல், வேலூர் சிறைச் சாலைகள், புதுக்கோட்டை சீர்திருத்தப்பள்ளி ஆகியவற்றில் இருந்து 19 தண்டனை கைதிகள், 7 சிறை வார்டன்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்