ரோபோ பயன்பாட்டில் 200 ஆண்டு பின்னடைவு!
காரைக்குடி: ரோபோ பயன்பாட்டில் ஜப்பானை விட நாம் 200 ஆண்டு நாம் பின்தங்கி உள்ளோம், என டில்லிஐ.ஐ.டி., பேராசிரியர் பாசில் கூறினார்.காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவர்களுக்கு ரோபோ வடிவமைக்கும் பயிற்சி நடந்தது. இதுகுறித்து பேராசிரியர் பாசில் கூறியதாவது: முதியவர்கள், உடற்திறன் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது என ரோபோ பயன்பாடு, ஜப்பானில் அதிகரித்துள்ளது. பகலில் வழிகாட்டியாகவும், இரவில் பாதுகாவலனாகவும் மனிதர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ரோபோக்கள் வடிவமைக்கப்படுகின்றன. ரோபோ பயன்பாட்டில் ஜப்பானை காட்டிலும் 200 ஆண்டு இந்தியா பின்தங்கி உள்ளது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பயிற்சி புத்தக அளவில் மட்டுமே உள்ளது. பள்ளி அளவில் ரோபோட்டிக்ஸ் பயிற்சி வழங்க வேண்டும். மாவட்டத்தில் ஒரு பள்ளி என தேர்வு செய்து அடிப்படை பயிற்சி அளித்து வருகிறோம். விவசாயத்துறையிலும் ரோபோ பயன்பாடு குறித்த ஆராய்ச்சி நடந்து வருகிறது.எல்லா வளமும் நம் நாட்டில் உள்ளது; நம் வளத்தை வெளிநாட்டுக்கு வழங்கி, அங்கிருந்து மதிப்பு கூட்டு பொருளாக நாம் இறக்குமதி செய்கிறோம். எந்த வளமும் இல்லாத ஜப்பான், எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளை உலக அளவில் ஏற்றுமதி செய்கிறது, என்றார்.