உள்ளூர் செய்திகள்

பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் 25 பேர் மாற்றம்

சென்னை: பொதுப்பணித்துறை பொறியாளர்கள், 25 பேர் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.திருச்சி மண்டல இணை தலைமை பொறியாளர் இரணியன், கோவை மண்டலத்துக்கும், அங்கு பணியாற்றிய மணியரசு, திருச்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.சென்னை இணை தலைமை பொறியாளர் பரிதி, சுற்றுலா வளர்ச்சி கழக கண்காணிப்பு பொறியாளராக மாற்றப்பட்டு உள்ளார்.அதே போல, கண்காணிப்பு பொறியாளர்களான ஆல்வின் ஞானசேகர், எஸ்.கார்த்திகேயன், செல்வகுமார், பிரான், ரவிச்சந்திரன், செந்துார், அரசு, சி.காத்திகேயன், கிருஷ்ணமூர்த்தி, பாலரவிக்குமார், பழனி, சச்சிதானந்தம், சாமிநாதன், ஜெயராமன்.பரிமளா, சிவசண்முகசுந்தரம், பிரகாஷ், செந்தில்குமரன், மதிமணி, செந்தில்குமார், ஹேமா, சரவணன் என மொத்தம், 25 பொறியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை, துறை செயலர் செல்வராஜ் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்