டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 2,690 பேர் பங்கேற்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பல்வேறு இடங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது.தமிழகத்தில் பல்வேறு துறை சார்ந்த, 800க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப, அரசு சார்பில் தேர்வுக்கான அறிவிப்பு, கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.இதற்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல் நிலை தேர்வு இன்று (நவ.,1) நடந்தது. இதில், பொள்ளாச்சி வட்டாரத்தில், 13 மையங்ககளில், 3,510 பேர் தேர்வு எழுத இருந்த நிலையில், 2,690 நபர்கள் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர்.மீதம் உள்ள, 820 பேர் வரவில்லை. இதில், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை, மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் பொள்ளாச்சி சப் கலெக்டர் ராமகிருஷ்ணசாமி நேரில் பார்வையிட்டனர்.