உள்ளூர் செய்திகள்

செமஸ்டர் தேர்வு 27ல் துவக்கம்

பாரதியார் பல்கலை சார்பில் அனைத்து கல்லுாரி முதல்வர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:ஊரடங்கு, 24ம் தேதி முடிவதால், 27ம் தேதி முதல் அட்டவணை அடிப்படையில் வழக்கமான தேதிகளில் தேர்வுகள் ஆன் லைனில் நடக்கும்.மாணவர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், விடைத்தாள் சமர்ப்பிக்க கல்லுாரி வர வேண்டிய சூழல் உள்ளதால், 25, 26 ஆகிய தேதிகளில் கல்லுாரி வளாகங்களை துாய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஐ.டி., பாஸ்வேர்டு பயன்படுத்தி, காலை, 9:45 மணிக்கு கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வு, முடிந்ததும் விடைத்தாளை பி.டி.எப்., வடிவில் பதிவேற்றம் செய்ய, 40 நிமிடம் அவகாசம் வழங்கப் படுகிறது. இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கண்காணிப்பார். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்