முன்னாள் படைவீரர்களுக்கு 29ல் வேலைவாய்ப்பு முகாம்
சென்னை: முன்னாள் படை வீரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 29ம் தேதி நடத்தப்படும் என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:சென்னை மாவட்டத்தில், முன்னாள் படை வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வேலை வாய்ப்பு கருத்தரங்க முகாம், வரும் 29ம் தேதி காலை 11:00 மணிக்கு, பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள சென்னை கலெக்டர் அலுவலகத்தின், எட்டாவது தள கூட்டரங்கில் நடக்க உள்ளது.இதில், முன்னாள் படைவீரர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விபரங்கள் தேவைப்படுவோர், சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.