உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித்தொகை 30ம் தேதி கடைசி நாள்

திருப்பூர்: பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த, 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மாணவியருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் நவ., 30க்குள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்