விருது பெற 31க்குள் விண்ணப்பம்
சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, தேசிய அளவில் சிறப்பாக சேவை செய்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிச.,31ல் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.தனி நபர் திறன் அடிப்படையில், 21 விருதுகள்; நிறுவனங்கள் அடிப்படையில் ஒன்பது விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விருதுகளை பெற விரும்புவோர், விருது குறித்த விபரங்களை, www.disabilityaffairs.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள்.