உள்ளூர் செய்திகள்

தொழிற்பிரிவு கலந்தாய்வில் 373 பேர் சேர்க்கை பெற்றனர்

தொழிற்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க, மாற்றுத் திறனாளிகள் உள்பட 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 373 மாணவர்கள் அவர்கள் விரும்பிய கல்லூரியில், பொறியியல் பாடப்பிரிவை தேர்வு செய்தனர். அவர்களுக்கான சேர்க்கை ஆணையும் வழங்கப்பட்டது. இந்த இடங்கள் போக 4,015 இடங்கள் காலியாக உள்ளன. தொடர்ந்து ஜுலை 6ம் தேதி வரை தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. சனிக்கிழமையன்று 800 மாணவர்கள் கலந்தாய்விற்காக அழைக்கப்பட்டுள்ளனர். காலை 7,30 மணி முதல் இரவு 7,30 மணி வரை சுமார் 8 பிரிவுகளாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது. பொறியியல் காலியிட நிலவரம் (தொழிற்பிரிவு) பிரிவு அரசு, அரசு உதவி பெறும கல்லூரி சுயநித கல்லூரி மொத்த காலியிடம் ஒசி 1 1176 1177 பிசி 2 1061 1063 பிசிஎம் 0 148 148 எம்பிசி 1 813 814 எஸ்சி 7 636 643 எஸ்சிஏ 1 126 127 எஸ்டி 1 42 43 மொத்தம் 13 4002 4015


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்