எம்.பி.பி.எஸ்., படிப்பு 381 இடங்கள் நிரம்பின
சென்னை: மருத்துவ படிப்பில், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், 381 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, நேரு விளையாட்டரங்கில், நவ.,18ல் துவங்கியது. அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீடு, சிறப்பு பிரிவு மாணவர்கள் ஒதுக்கீடு முடிந்து, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கிய நிலையில், &'நிவர்&' புயலால் ஒத்தி வைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, நேற்று துவங்கிய, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கிற்கு, 390 மாணவர்கள் அழைக்கப் பட்டிருந்தனர். அவர்களில், 382 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்;381 பேர் விரும்பிய அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்றனர். தற்போது, அரசு கல்லுாரிகளில், 2,059 எம்.பி.பி.எஸ்., - - 151 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. அதேபோல, சுயநிதி கல்லுாரிகளில், 1,060 எம்.பி.பி.எஸ்., - - 985 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இன்றைய கவுன்சிலிங்கிற்கு, 451 பேர் அழைக்கப் பட்டு உள்ளனர்.