உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு குரூப் - 4 தேர்வில் சலுகை

சென்னை: 'குரூப் - 4 தேர்வில், அரசு துறைகளில், தற்காலிக அடிப்படையில் பணியாற்றும், மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு, சலுகைகள் வழங்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு, அடுத்த ஆண்டு ஜன., 10ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு, வரும் 5ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில், அரசு துறைகளில், தற்காலிக அடிப்படையில் பணியாற்றும், மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு, 'குரூப் - 4' தேர்வில், சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கடந்த 2025ம் ஆண்டு அக்., 10ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இந்த சலுகைகள் வழங்கப்படும். அதாவது, தற்காலிக மாற்றுத்திறன் பணியாளர்கள் பணியாற்றிய காலத்திற்கு ஏற்ப, 5 முதல் 10 சதவீதம் வரை, 'வெயிட்டேஜ் மதிப்பெண்' எனப்படும் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்