உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு எழுதும் 26,088 பேர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 26,088 பேர் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர். வரும் டிச., 21ல், மாவட்டத்தில் 102 மையங்களில் இத்தேர்வு நடக்கவுள்ளது. ஏற்கனவே விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளன. தேர்வு நாளில் அந்தந்த மையங்களை கண்காணிக்கும் வகையில் 102 முதன்மை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். பதட்டமான மையங்களாக கருதப்படும் பரமக்குடியில் ஆயிரவைசிய மெட்ரிக்., சவுராஷ்ட்ரா மெட்ரிக்., மற்றும் பாரதியார் மெட்ரிக்., பள்ளிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படவுள்ளது. தேர்வு நாளில் விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே அந்தந்த மையங்களுக்கு சென்று ஹால் டிக்கெட் பரிசோதனை செய்து கொள்ளும்படி, அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்