உள்ளூர் செய்திகள்

தேசிய குத்துச்சண்டை 45 மாணவர்கள் தேர்வு

சேலம்: சேலம் வித்யபாரதி கல்வி நிறுவனங்கள் சார்பில், சேலம் வித்யா நகர் வித்யா மந்திர் பள்ளியில் மாநில குத்துச்சண்டை போட்டி நடந்தது.14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான போட்டிகளில், சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில் சிறப்பாக விளையாடிய, 45 மாணவர்கள், நவம்பரில் நடக்க உள்ள தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் அருள்முருகன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்