உள்ளூர் செய்திகள்

தட்டச்சு தேர்வில் 4,500 பேர் பங்கேற்பு

சேலம்: தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு, பிப்ரவரி, ஆகஸ்டில் நடக்கிறது. அதன்படி ஆகஸ்ட் தேர்வு நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில், தியாகராஜர் பாலிடெக்னிக், ஏற்காடு சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக், மேச்சேரி காவிரி பாலிடெக்னிக், மல்லுார் கொங்கு பாலிடெக்னிக் என, 4 மையங்களில் தட்டச்சு தேர்வு நடந்தது. 4,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இளங்கலையில் தமிழ், ஆங்கிலம், முதுகலையில் தமிழ், ஆங்கிலம் என, 4 பிரிவுகளாக தேர்வு நடந்தது. பயிற்சி மையங்கள், தேர்வர்களின் எண்ணிக்கை அடிப்படையில், நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வு நடந்தது. தேர்வு பணியில் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்