உள்ளூர் செய்திகள்

சத்யபாமா பல்கலை ரூ.50 லட்சம் நிவாரணம்

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக, சத்யபாமா நிகர்நிலை பல்கலை சார்பில் 50 லட்சம் ரூபாய், தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்டது.தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலை சார்பில் 50 லட்சம் ரூபாய், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இதை சத்யபாமா நிகர்நிலை பல்கலை வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், பல்கலை தலைவர் மேரி ஜான்சன் மற்றும் துணைத் தலைவர் மரிய பெர்ணடெட் தமிழரசி ஜான்சன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர்.மேலும், தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக மக்களின் நலனுக்காக நிவாரண நிதி வழங்கிய சத்யபாமா நிகர்நிலை பல்கலை நிர்வாகத்திற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்