மெய்நிகர் ஆய்வகத்தில் 544 மாணவர்கள் பயன்
மசக்காளிபாளையம்: மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பிப்., முதல் மெய்நிகர் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மேற்பார்வையில், கடினமான அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களை நவீன 'ஸ்மார்ட் டிஸ்ப்ளே', வி.ஆர்., ஹெட்செட்கள், கன்ட்ரோலர்கள் கொண்டு மாணவர்கள் முப்பரிமாண முறையில் படிக்கின்றனர்.ஜூனில் 45 அமர்வுகள், ஜூலையில் 52, ஆக.,ல் 35 என, 132 அமர்வுகளில், இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டு வரை படிக்கும் மாணவ, மாணவியர் 544 பேர் பயனடைந்துள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.