உள்ளூர் செய்திகள்

திறக்கப்படாத நூலகத்திற்கு ரூ.63 ஆயிரத்தில் சீரமைப்பு பணி

வாலாஜாபாத்: ஆரியம்பாக்கம் கிராமத்தில், நுாலகர் இல்லாததால், திறக்கப்படாமல் உள்ள நுாலக கட்டடத்திற்கு, 63 ஆயிரம் ரூபாயக செலவில் சீரமைப்பு பணிகள் செய்திருப்பது, கிராமவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, ஆரியம்பாக்கம் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கட்டப்பட்ட நுாலகம், நுாலகர் இல்லாத தால் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன், ஊரக கட்டடங்கள் புதுப்பிக்கும் நிதியில் இருந்து, 63 ஆயிரம் ரூபாய் செலவில், இந்த நுாலக கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  சீரமைப்பு பணிகள் முடிந்தும், நுாலகர் நியமிக்கப்படாததால், அப்பகுதி வாசிகள் அதிருப்தியடைந்து உள்ளனர். மேலும், நுாலகத்தில் இருந்த புத்தகங்கள் மாயமானதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், புத்தகங்கள் நுாலகத்தில் பாதுகாப்பாக உள்ளன. நுாலகரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்