இன்ஜி., படிப்பு 64,629 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு
சென்னை: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, மூன்றாம் சுற்று கவுன்சிலிங், கடந்த 7ம் தேதி துவங்கியது. இதில், 64,629 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.இன்று மாலை, 5.00 மணிக்குள், தற்காலிக ஒதுக்கீடு ஆணையை, மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். நாளை இன்ஜினியரிங் படிப்புக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.