உள்ளூர் செய்திகள்

பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் சொல்லி அசத்தும் 12 வயது சிறுமி

பெங்களூரு: இன்றைய நவீன காலகட்டங்களில் பெரியவர்களுக்கு தெரியாத விஷயங்கள் கூட, குழந்தைகளுக்கு தெரிகின்றன.பெரியவர்கள் கூட ஏதாவது ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள சற்று நேரம் ஆகலாம். ஆனால் குழந்தைகள் சட்டென புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுகின்றனர்.அதே நேரம் தற்போது உள்ள குழந்தைகளுக்கு புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஒன்றரை வயது குழந்தைகள் கூட தற்போது, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து வருகின்றனர். அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த 12 வயது சிறுமி, பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் சொல்லி அசத்துகிறார்.ஜோகுபாளையாபெங்களூரு, ஹலசூரு ஜோகு பாளையாவில் வசிப்பவர் நவீன். இவரது மனைவி சிம்பு. இந்த தம்பதி மகள் சிரி, 12. பெங்களூரு ரிச்மென்ட் சதுக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவர் பகவத் கீதையில், 700 ஸ்லோகங்களைச் சொல்லி அசத்துகிறார்.இதுகுறித்து சிரி பெருமையுடன் கூறியதாவது:என் பாட்டி கீதா, ஆசிரியையாக உள்ளார். எனக்கு 6 வயது இருக்கும்போது, அவரது பள்ளிக்கு என்னையும் அழைத்துச் செல்வாராம். அவரது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பகவத் கீதை கற்றுக் கொடுப்பார். அப்படியே எனக்கும் கற்றுக் கொடுத்தார். நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் பகவத் கீதை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.அறம், நெறிஅறம், நெறி தவறாமல் வாழ்வது, வாழ்க்கையில் நன்மை தீமைகளை அறிவது. எந்தெந்த சூழ்நிலை எவ்வாறு செயல்பட வேண்டுமென, பகவத் கீதை மூலம் கற்றுக் கொண்டேன்.நான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் சொல்லித் தர ஆசைப்படுகிறேன். பெங்களூரு இஸ்கான் கோவில் உட்பட பல கோவில்களில் பகவத் கீதையை பற்றி சொற்பொழிவு நிகழ்த்தி உள்ளேன். இதனால் எனக்கு கோவில்களில் இருந்து பாராட்டு கிடைத்தது. இது என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம்.பாட்டிக்கு நன்றிபகவத் கீதை சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்றாலே, கோவில்களில் இருந்து என்னை அழைக்கின்றனர். இதற்காக என் பாட்டிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். என் அப்பா நவீன், இன்ஜினியராக உள்ளார். அம்மா ஷிம்பு, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.இவ்வாறு சிரி கூறினார்.சிரியின் சேவையை பாராட்டி, அவருக்கு கர்நாடக ஆரிய வைஸ்ய மகா சபா, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குகிறது. பெங்களூரு டவுன் ஹாலில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, சிரிக்கு விருந்து வழங்கி பாராட்டுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்