உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வில் சாதித்த 750 மாணவர்களுக்கு பரிசு

நவஇந்தியா: மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மற்றும் கொங்குநாடு அறக்கட்டளை சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.10வது ஆண்டாக நடக்கும் விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், இந்துஸ்தான் கல்விக் குழும நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் உள்ளிட்டோர் பேசினர்.பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 750க்கும் அதிகமான மாணவ மாணவியருக்கு சிறப்பு பரிசுகளும், மாவட்டத்தில் சிறந்து விளங்கும் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்