உள்ளூர் செய்திகள்

கேட் தேர்வில் 8 மாணவர்கள் 100௦௦ சதவீதம் பெற்றனர்

அந்த 8 மாணவர்களும் பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேட் தேர்வுதான் இந்தியாவிலுள்ள 11 ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் மற்றும் 150 வணிகப் பள்ளிகள் ஆகியவற்றில் சேர்வதற்கு நுழைவாயிலாக உள்ளது. முதலிடம் பெற்ற 8 பேரில் மும்பையில் இரண்டு பேரும், புனேவில் ஒருவரும், டெல்லி, பெங்களூர், சென்னை, கொல்கத்தா மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் தலா ஒருவரும் அடங்குவர். இந்தாண்டு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக, இரண்டு பெண்கள் கேட் தேர்வில் 99.9% மதிப்பெண் பெற்றுள்ளனர். அப்பெண்களில் ஒருவர் கேரளாவையும், ஒருவர் ஆந்திராவையும் சேர்ந்தவர். மொத்தம் 19 மாணவர்கள் 99.9% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களில் தலா மூன்று பேர் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இருவர் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் அடையாள விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. தேர்வெழுதிய மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விவரங்களை www.catiim.in என்ற கேட் வலைதளத்திலிருந்து பெறலாம். கடந்தாண்டு அக்டோபர் 27 முதல் நவம்பர் 24 வரை நடந்த கேட் தேர்வில் மொத்தம் 1.86 லட்சம் பேர் கலந்துகொண்டு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட ஐ.ஐ.எம்.-கள், தங்களின் வலைதளங்களில் 2011-2013 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை விதிமுறைகளைப் பற்றிய விவரங்களை ஏற்றி வைத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்