உள்ளூர் செய்திகள்

இன்று முதல் நவ.9 வரை கைத்தறிக் கண்காட்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கைத்தறி கண்காட்சி அரசு போக்குவரத்து பணிமனை பின்புறம் அமைந்துள்ள காஜா மஹாலில் இன்று (நவ.3) முதல் நவ.9 வரை நடக்கிறது.இங்கு வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.150 வரையிலும், பட்டு ரகங்களுக்கு ரூ.300ம் அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. 25 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.நெசவாளர்களின் தயாரிப்புகளான பெட்ஷீட்கள், பட்டு சேலைகள்,பட்டு வேட்டிகள், கோரா சேலைகள், பருத்தி சேலைகள், துண்டுகள், அசல்பட்டு, காட்டன் சேலைகள், லுங்கிகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் இடம் பெற்றுஉள்ளன. கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம், என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்