நியூக்ளியர் டெக்னாலஜி
இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, மாணவர்கள் பிரான்ஸ், பாரீஸ், ஜெனீவா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு, துறை தொடர்பான ஆய்வு மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. இறுதி ஆண்டின் போது இந்தியாவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணுக்கரு உலையிலும் 900 நிபுணர்கள் தேவை. எனவே இத்துறையில் வேலைவாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும், வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. படிப்பு எம்.டெக்., நியூக்ளியர் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி தகுதிகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், இத்துறை சார்பான இளநிலை பட்டப்படிப்பு முடித்து, ஐ.ஐ.டி., நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால், இப்படிப்பில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு http://www.du.ac.in