தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை
சென்னை: வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெற விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு, நிதியுதவி வழங்கும் திட்டத்தில், பயனாளிகளின் எண்ணிக்கை, 30ல் இருந்து, 50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. நிதியுதவி பெற விரும்பு வோர், தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ்சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கு, ஜன., 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் தமிழறிஞர்களுக்கு, மாதந்தோறும், 2,000 ரூபாய், மருத்துவ படிக்கு, 100 ரூபாய், இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். விண்ணப்பதாரருக்கு, 58 வயது நிறைவடைந் திருக்க வேண்டும்; ஆண்டு வருமானம், 36 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை, தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில், www.tamilvalarchithurai.org பதிவிறக்கம் செய்யலாம்; அலுவலகத்திலும் இலவசமாக பெறலாம்.