உள்ளூர் செய்திகள்

அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!

ஆன்லைன் வணிகத் துறையில் எராளாமான வாய்ப்புகள் உள்ளன. சிறு மற்றும் நடுத்தர நிலை தொழில்களை இதில் மேற்கொள்ள திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. ஆன்லைன் வாயிலாக எந்த ஒரு பொருளையும் வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவதற்கு, ஆன்லைன் வர்த்தகம் மீதான நம்பகத்தன்மையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆதலால், திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜன்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மிஷின் லேர்னிங் ஆகிய புத்தம் புதிய துறைகளில் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவை மட்டுமின்றி, ஆன்லைன் வணிகத்தை மேற்கொள்ள தொழில்முனைவோர்களுக்கும் அதிமான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என மத்திய திறன் வளர்ப்பு மற்றும் தொழில்முனைவுத் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, சமீபத்தில் ஆன்லைன் வர்த்தகம் குறித்த மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்