சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
ஆவடி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பூந்தமல்லி ஒன்றியம் சோராஞ்சேரி ஊராட்சியில், மினி மாரத்தான் நடந்தது. 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை, கிராமப்புறங்களிலும் ஏற்படுத்தும் நோக்கில், இப்போட்டி நடத்தப்பட்டது. அணைகட்டுச்சேரி முதல் ஆயில்சேரி வரை, சாலை மார்க்கமாக 4 கி.மீ., துாரத்திற்கு, பங்கேற்பாளர்கள் ஓடினர். முடிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை, பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி வழங்கி கவுரவித்தார்.