ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழக அரசு தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.பள்ளிக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாயவன், சங்கரபெருமாள், ஜனார்த்தனன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளும், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களும் பங்கேற்று, கோரிக்கை குறித்து கோஷமிட்டனர்.