வாழ்க்கை வாழ்வதற்கே!
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., உட்பட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 98 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2023ம் ஆண்டில் மட்டும் இதுவரை 20 தற்கொலை நிகழ்வுகள் கணக்கிடப்பட்டுள்ளது. 2018ல் 21 நிகழ்வுகளும், 2019 முதல் 2021ம் ஆண்டுகள் வரை தலா 7ம், கடந்த ஆண்டில் 24 நிகழ்வுகளும் கணக்கிடப்பட்டுள்ளன. இத்தகவலை, மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் மாநிலங்களவையில் வெளியிட்டுள்ளார். ‘மாணவர்களிடம் உடல்பயிற்சி, விளையாட்டு, ஆரோக்கியம், மனம் மற்றும் உணர்வுகள் ரீதியான நலம் ஆகியவற்றை மேம்படுத்த கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அம்சங்கள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க கல்வி அமைச்சகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.