இலக்கிய திருவிழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பொது நுாலகத் துறை மற்றும் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி இணைந்து, இளைஞர் இலக்கிய திருவிழாவை நடத்தியது.இதில், வினாடி - வினா, பேச்சாற்றல், விவாதமேடை, ஓவியம் உள்ளிட்ட 10 போட்டிகளில், கல்லுாரி மாணவியர், 200 பேர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற 33 மாணவியருக்கு, பரிசளிப்பு நிகழ்ச்சி, பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது.இதில், மாவட்ட நுாலக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நுாலக ஆய்வாளர் கணேசன், கல்லுாரி முதல்வர் கோமதி, ஒருங்கிணைப்பாளர்கள் லாவண்யா, கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.