புத்தக விழா
மதுரை: மதுரையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் புத்தகக் கண்காட்சி துவங்கியது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்டத் தலைவர் மு.செல்லா விற்பனையாளர் தமிழ்ச்செல்வியிடம் புத்தகங்களை பெற்று முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.காந்தி கிராம பல்கலை தமிழ்த்துறைத் தலைவர் பா.ஆனந்தகுமார் பேசினார். நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஆர்.மகேந்திரன், மேலாளர் மு.தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துரைராஜ், விஜயன் செய்திருந்தனர்.