பட்டமளிப்பு விழா
பழநி: பழநி சண்முகநதி பி.வி.பி., மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார்.திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி முதல்வர் சவுந்தர்ராஜன் பட்டம் வழங்கினார். நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார், அறங்காவலர்கள் வஞ்சியப்பன், ராஜேந்திரன், முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் பங்கேற்றனர்.