உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா

கோவை: துடியலுார், வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் 28 வது பட்டமளிப்பு விழா நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.முதல்நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எல்டி மைண்ட்ட்ரீ கோவை பிரிவின் மூத்த இயக்குனர் ஹரிணி, 496 பேருக்கு பட்டம் வழங்கினார்.இரண்டாம் நாள் நிகழ்வில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் வெள்ளை பாண்டி 468 பேருக்கு பட்டம் வழங்கினார். மேலும், முதல் மதிப்பெண் பெற்ற 12 பேருக்கு தங்கப்பதக்கங்களும், சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.விழாவில் எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் தலைமை செயல் அதிகாரி ராம்குமார்,துணை முதல்வர் கருப்புசாமி, கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்