பிசினஸ் அனலிஸ்ட்
தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களை கண்டறிந்து, தரவுகள் மூலமாக தீர்வு காண்பது 'பிசினஸ் அனலிஸ்ட்'களின் பிரதான பணி!கல்வி தகுதி: மேல்நிலை கல்வியில் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களை விருப்ப பாடமாக படிக்கலாம். வணிக நிர்வாகம், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது பொறியியல் உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளை படிக்கலாம். வணிக நிர்வாகம் அல்லது பிசினஸ் அனலிட்டிக்ஸ் பிரிவில் முதுநிலை பட்டம் பெறின், அது அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.முக்கிய கல்வி நிறுவனங்கள்: இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள்நுழைவு தேர்வுகள்'கேட்' எனும் காமன் அட்மிஷன் டெஸ்ட் - ஐ.ஐ.எம்., மற்றும் பிற முன்னணி அரசு கல்லுாரிகளில் எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான மிக முக்கியமான பொது நுழைவுத் தேர்வு இது.சி.யு.இ.டி., யு.ஜி.,/ பி.ஜி., -- மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் புகழ்பெற்ற அரசு கல்லுாரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான தேர்வு இது.தேவைப்படும் திறன்கள்தரவுகளை பகுப்பாய்வு செய்யும் திறன், சிறந்த தகவல்தொடர்பு திறன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம், கூர்மையான சிந்தனை மற்றும் கணினியில் எக்ஸெல், எஸ்.க்யூ.எல்., மென்பொருள் இயக்கத்தில் ஆழ்ந்த அறிவு அவசியம்.